ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் தனது தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தோல்வி அடைந்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு முதல் டிக்சன் தொகுதியை தக்க வைத்துவந்த பீட்டர் டட்டன், இம்முறை அத்தொகுதியில் மண்கவ்வியுள்ளார்.
அத்துடன், லிபரல் கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் பீட்டர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.