பஸ் விபத்தில் 10 பேர் பலியாகி, 25 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குறித்த பஸ் சாரதிக்கு 32 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Hunter Valley
பகுதியில் 2023 ஜுன் 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
திருமண நிகழ்வொன்றுக்கு சென்றவர்கள் திரும்பிய பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானது. ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற மோசமான விபத்துகளால் ஒன்றாக இவ்விபத்து கருதப்பட்டது.
இதனையடுத்து 59 வயதான பஸ் சாரதி கைது செய்யப்பட்டார். வேகமாக வாகனம் ஓட்டியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தனக்கு எதிரான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பஸ் சாரதி ஒப்புகொண்டுள்ளார். இதனையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி 2048 மே மாதம்வரை அவர் பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது.