ஆஸ்திரேலியாவில் மீண்டும் அரியணையேறுகிறது லேபர் கட்சி!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்றது.
தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகளின்படி, லேபர் கட்சி வெற்றிபெறும் எனக் கூறப்பட்டது. இதற்கமைய லேபர் கட்சியின் வெற்றியும் தற்போது உறுதியாகியுள்ளது.
மொத்தம் 151 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு 76 ஆசனங்கள் தேவை.
இந்நிலையில் லேபர் கட்சி 78 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
எதிர்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பீட்டர் டட்டனுக்கு 30 இடங்களே கிடைத்துள்ளன.