ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், செனட் சபையில் கிறீன்ஸ் கட்சியின் செல்வாக்கு மேலோங்கியுள்ளது.
இதற்கமைய மேல் சபையாகக் கருதப்படும் செனட் சபையில் கிறீன்ஸ் கட்சி 11 இடங்களைப் கைப்பற்றும் சாத்தியம் உதயமாகியுள்ளது.
இது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று கிறீன்ஸ் கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மெல்பேர்ணில் தனது தொகுதியை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீழ் சபையில் அதாவது பிரதிநிதிகள் சபையில் பெற்ற ஆதரவை இம்முறை அதே அளவில் கிறீன்ஸ் கட்சியால் பெறமுடியாமல்போனது.
கிறீன்ஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் குயின்ஸ்லாந்தில்கூட செல்வாக்கு சரிந்துள்ளது. எனினும், செனட் சபை ஊடாக எதிரணிக்குரிய பணியை சிறப்பாக முன்னெடுக்கும் வாய்ப்பு கிறீன்ஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.