நியூசிலாந்தின் முன்னாள் பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ், ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தின் பிரதம பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜுன் 27 ஆம் திகதி அவர் இப்பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
விக்டோரிய மாநில பொலிஸ் ஆணையாளராக பதவி வகித்த ஷேன் பாட்டன் அண்மையில் பதவி விலகினார்.
இந்நிலையிலேயே புதிய ஆணையர் தொடர்பான அறிவிப்பை மாநில பிரீமியர் இன்று வெளியிட்டார்.
விக்டோரிய காவல்துறையை வழிநடத்த மைக் புஷ் பொருத்தமான நபர் எனவும் பிரீமியர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் 2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றவேளை இவர் அந்நாட்டின் பொலிஸ் ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.
இவர் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸ் ஆணையாளராக பதவியேற்கும்வரை, துணை ஆணையாளர், பதில் ஆணையாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.