கிறீன்ஸ் கட்சித் தலைவர் ஆடம் பாண்ட், தனது சொந்த தொகுதியை இம்முறை இழக்கக்கூடும் எனத் தெரியவருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணி இன்னும் நூறு சதவீதம் முழுமைப்பெறவில்லை.
இந்நிலையில் இன்றைய நிலைவரத்தின் பிரகாரம் மெல்பேர்ண் தொகுதியில் கிறீன்ஸ் கட்சி தலைவரைவிடவும், லேபர் கட்சி வேட்பாளர் முன்னிலையில் இருக்கின்றார்.
ஆரம்பக்கட்ட வாக்கெண்ணும் நடவடிக்கையின்போது கிறீன்ஸ் கட்சி தலைவர் முன்னிலையில் இருந்தாலும் தற்போது லேபர் கட்சி வேட்பாளர் அவரை முந்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் மெல்பேர்ண் தொகுதியை ஆடம் பாண்ட தக்கவைத்துவந்தார். இம்முறை லேபர் கட்சி ஆதரவு அலையில் அவரின் தொகுதியும் அள்ளுண்டுச்செல்லும் நிலையில் உள்ளது.