ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் 150 எம்.பிக்கள், 66 முதல் 74 வரையான பெண் எம்.பிக்கள் இடம்பெறவுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் 58 பெண் எம்.பிக்கள் இடம்பெற்றிருந்தனர். 2019 ஸ்கொட் மொரிசன் ஆட்சியின்போது அந்த எண்ணிக்கை 40 ஆகவே காணப்பட்டது.
பிரதிநிதித்துவ சபையில் லேபர் கட்சிக்கு இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள 87 ஆசனங்களில் 47 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே வென்றுள்ளனர்.
பூர்வக்குடி அமைச்சர் லிண்டா பர்னியை அவரது தொகுதியில் வீழ்த்திய ஈழத்து தமிழ் பின்னிணி கொண்ட Ashvini Ambihaipahar , எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனை மண்கவ்வி வைத்த அலி பிரான்ஸ் ஆகியோர் புது முகங்களாக லேபர் கட்சி சார்பில் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
லிபரல் கூட்டணி சார்பில் நாடாளுமன்றம் செல்வதற்கு இதுவரை 7 பெண் எம்.பிக்கள் தகுதிபெற்றுள்ளனர். சுயாதீன அணிகள் சார்பிலும் பெண்கள் அதி உயர் சபைக்கு செல்லவுள்ளனர்.