லேபர் கட்சியின் விசேட கூட்டமொன்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் வென்று தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையை லேபர் கட்சி பெற்றுள்ள நிலையிலேயே இக்கூட்டத்துக்கு பிரதமர் அல்பானீஸி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பதவிகள் மற்றும் அமைச்சரவை நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முழுமையான தேர்தல் முடிவு வெளியான பின்னரே அமைச்சரவை பற்றி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சு பதவியில் மாற்றம் வராது. அப்பதவியில் பெனி வோங் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சு பதவியில் ரிச்சர்ட் மார்சஸ் நீடிப்பார் எனவும் லேபர் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பொருளாளர் மற்றும் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளிலும் மாற்றம் இடம்பெறாது என அறியமுடிகின்றது.