தீ விபத்தில் குழந்தை பலி: மேலும் நால்வர் காயம்!
குயின்ஸ்லாந்து, டூவூம்பாவில் பகுதியில் வீடொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் குழந்தையொன்று பலியாகியுள்ளது.
மேலும் மூவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தீ விபத்தின்போது வீட்டுக்குள் தாய், தந்தை மற்றும் ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர்.
தாயும், இரு பிள்ளைகளும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
டூவூம்பா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் அவர்கள் பிரிஸ்பேனுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தந்தையும், ஏனைய இரு குழந்தைகளும் டூவூம்பா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தீ விபத்தின்போது காணாமல்போயிருந்த குழந்தையொன்றே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் குயின்ஸ்லாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.