பிரிஸ்பேன், டூவூம்பாவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தல் உயிரிழந்த சிறார்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
தீ விபத்து நேற்று இடம்பெற்றபோது வீட்டுக்குள்ளேயே 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் மேலும் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
4 மற்றும் 7 வயதுகளுடைய சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
எரிகாயங்களுக்கு உள்ளான மேலும் மூவர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் குற்றச்செயல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.