40 பேரை இரகசியமாக படம்பிடித்த குயின்ஸ்லாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக 39 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 40 பேரின் படங்கள் மற்றும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நான்கு சிறார்கள் உட்பட இது தொடர்பில் 23 பேரை பொலிஸார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர். ஏனைய 17 பேரை அடையாளம் காண்பதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது.
வீடுகளுக்கு வெளியில் இருந்து ஜன்னல் வழியாகவே இவர் மக்களை படம்பிடித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.