மெல்பேர்ணில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் நடைபெறுகின்றது.
பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் போர் எதிர்;ப்பாளர்கள் என பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மெல்பேர்ண் மாநாட்டு மற்றும் கண்காட்சி நிலையத்தில் நடைபெறும் குறித்த ஆயுதக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு மற்றும் ஆயுத நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமைவரை குறித்த கண்காட்சி நடைபெறுகின்றது.
நேற்று நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.
இதன்போது 27 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்;. 39 இற்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தை ஒடுக்குவதற்கு அதிகளவு அதிகாரத்தை பொலிஸார் பயன்படுத்தினர் என போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்றும் போராட்டம் நடைபெறுகின்றது. நேற்றைய சம்பவத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையும் தீவிரமாக்கப்பட்டிருந்தது.