அடிலெய்டின் வடக்கு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் யுவதியொருவர் பலியாகியுள்ளார்.
பாரா ஹில்ஸ் வெஸ்ட்டைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பிறகு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 25 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
அவர் பொலிஸ் காவலில் உள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.