சிறார் துஷ்பிரயோக பொருட்களை வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சீனப் பிரஜை, பேர்த் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் பேர்த் விமான நிலையத்துக்கு வந்த குறித்த நபர், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறார் துஷ்பிரயோக பொருட்கள், படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன அவர் வசம் இருந்துள்ளன. அவரது தொலைபேசி சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அதிலும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டது. மே 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கமையவே அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இக்குற்றத்துக்காக அவருக்கு 15 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.