ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் இழைத்தனர் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் படை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட பதக்கங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் Richard Marles ஆல் குறித்த பதக்கங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.
எத்தனை படை அதிகாரிகளின் பதக்கங்கள் இவ்வாறு பறிக்கப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், 10 இற்கு குறைவான அதிகாரிகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு வழங்கு தொடுப்பதற்குரிய வாய்ப்பு படையினருக்கு உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Brereton விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
Brereton விசாரணை அறிக்கை 2020 இல் வெளியிடப்பட்டது. இதில் கொலை மற்றும் தவறான நடத்தை தொடர்பில் 19 படையினர் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.