ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ள நிலையில், பிரதமர் அந்தோனி அல்பானீஸியால் இன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் துணை பிரதமர் பதவி ரிச்சர்ட் மார்லஸிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் ஆகியோர் முன்னர் வகித்த பகுதிகளில் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை, குடிவரவு, சைபர் மற்றும் கலை தொடர்பான அமைச்சராக டோனி பர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூர்வக்குடி மக்கள் விவகாரம் தொடர்பான அமைச்சராக மலார்ந்திரி மெக்கார்த்தியும், கல்வி அமைச்சராக ஜேசன் கிளேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனிவா வெல்ஸிடம் தகவல் தொடர்பாடல் துறையும், முர்ரே வார்டிடம் சுற்றாடல்துறை அமைச்சு பதவியும் கையளிக்கப்பட்டுள்ளது. டிஆன் அலி மற்றும் டிம் அயர்ஸ் ஆகியோரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.