நியூ சவூத் வேல்ஸ் கடற்கரையில் கப்பலொன்றிலிருந்து ஆயிரம் கிலோவுக்கு அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் ஐவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் மற்றும் பெடரல் பொலிஸார் கூட்டாக விசாரணை வேட்டையில் இறங்கினர்.
போதைப்பொருள் கடத்திவரப்பட்ட கப்பலும் கண்காணிக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
மே 9 ஆம் திகதி குறித்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
24 மற்றும் 26 வயதுகளுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஆயிரத்து 39 கிலோ கொக்கைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி 623.4 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் இச்சம்பவம் தொடர்பில் 28,29 மற்றும் 35 வயதுகளுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐவரும் பரமட்டா நீதிமன்றத்தில் மே 10 ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. ஜுலை 15 ஆம் திகதி அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.