நெஷனல்ஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு டேவிட் லிட்டில்பிரவுட் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெரின் டேவி தனது செனட் இடத்தை இழந்துவிட்டதால் துணைத் தலைவராக கெவின் ஹோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை லிபரல் கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது.
நேஷனல்ஸ் கட்சியில் இருந்து லிபரல் கட்சி பக்கம் தாவிய செனட்டர் ஜெசிந்தா பிரைஸ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
அத்துடன், கிறீன்ஸ் கட்சிக்குரிய புதிய தலைவர் தொடர்பில் மே 15 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.