லிபரல் கட்சியின் புதிய தலைவராக சூசன் லே தெரிவு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சி வரலாற்றில் இம்முறையே தலைமைப் பதவிக்கு பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று கன்பராவில் நடைபெற்றது.
தலைமைப்பதவிக்கு துணைத் தலைவர் சூசன் லே, முன்னாள் நிழல் பொருளாளர் அங்கஸ் டெய்லர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அங்கஸ் டெய்லரை 29 வாக்குகள் வித்தியாசத்தில் லே தோற்கடித்தார்.
டெ ஓ பிரையன் துணை தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.