உக்ரைனில் வெடிகுண்டு அகற்றும் தொண்டு நிறுவனமான Prevail Together இல் தன்னார்வலராக பணியாற்றும் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அவருடன் இசியம் அருகே பிரீவைல் டுகெதரைச் சேர்ந்த சக ஊழியரும் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Prevail Together என்ற அமைப்பானதுபொதுமக்கள் வீடு திரும்புவதற்காக கொடிய கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிபொருட்களை அப்புறப்படுத்துகிறது, மேலும் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது.
உக்ரைனில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியரின் குடும்பத்திற்கு தனது "ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்" தெரிவித்து, அவர் ஒரு தொண்டு நிறுவனத் தன்னார்வலர் என்பதை உறுதிப்படுத்தியதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
உக்ரைனில் இறந்த ஆஸ்திரேலியரின் குடும்பத்திற்கு தூதரக உதவியை வழங்குவதாக வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"இராணுவ மற்றும் மனிதாபிமானத் துறைகளில் அனுபவம் வாய்ந்த வீரர்களின் நிபுணத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்ட குழு" என்று பிரீவெயில் அமைப்பு விவரிக்கப்படுகிறது.
சபா.தயாபரன்