ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தோனேசியா புறப்படுகின்றார்.
தென்கிழக்கு ஆசியாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே கன்பராவின் இந்த நகர்வு அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே இரு நாட்கள் பயணமாக ஜகார்த்தாவுக்கு செல்கின்றார்.
இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பின்போது வர்த்தகம் , பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துப்பை அதிகரிப்பது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, புதிய பாப்பரசர் 14 ஆவது லியோவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் வத்திக்கானுக்கும் செல்லவுள்ளார்.
சபா.தயாபரன்