அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பரஸ்பர வரி விதிப்புகளை இடைநிறுத்தியுள்ளமை வரவேற்ககூடிய விடயமாகும் - என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
அத்துடன், ஆஸ்திரேலியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கிக்கொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் அவர் கூறினார்.
" ஆஸ்திரேலியா இறைமையுள்ள நாடாகும். எனவே, தேசிய நலனை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும்.
ட்ரம்ப் நிர்வாகத்தை கையாள்வதற்கு வழக்கமான விதிகள் பொருந்தாது. ஒரு வித்தியாசமான அணுகுமுறை அவசியம் அவசியம்." எனவும் பெனி வோங் குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸி விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார் என தெரியவருகின்றது.