மேற்கு ஆஸ்திரேலியாவில் தெருவில் நடந்துசென்ற பெண்ணொருவரை தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இச்சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை தாக்கி, அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த ஆண் முற்பட்டுள்ளார். அவரின் பிடிக்குள் இருந்து தப்பிச்சென்று, இது தொடர்பில் அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
43 வயதான நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.