சிட்னியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
சிட்னி புறநகர் பகுதியான ஹர்ஸ்ட்வில்லில் உள்ள வாக்குச் சாவடியொன்றில் ஆயிரத்து 866 வாக்குகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஊழியர் ஒருவர், தேர்தல் ஆணைக்குழுவின் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வழங்கவில்லை.
வாக்குகள் ஏற்கனவே எண்ணப்பட்டதால் இந்த சம்பவம் பார்டன் தொகுதி முடிவுகளை பாதிக்கவில்லை. எனினும், குறித்த ஊழியர் வீட்டுக்கு எவ்வாறு வாக்குச் சீட்டுகள் சென்ற என்பது பற்றி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
குறித்த ஊழியரின் வீட்டில் இருந்து வாக்குச்சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
பார்டன் தொகுதியில் லேபர் கட்சி வேட்பாளரான Ash Ambihaipahar வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.