நேற்று இரவு ஜகார்த்தா வந்தடைந்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவால் வரவேற்கப்பட்டார்.
இந்தோனேசியுக்கான தனது விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் "தேர்தலுக்குப் பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தோனேசியா வந்துள்ளேன், ஏனெனில் நமது பிராந்தியம் முதன்மையானது.
ஆஸ்திரேலியாவும் இந்தோனேசியாவும் மிக நெருக்கமான அண்டை நாடுகளும் நெருங்கிய நண்பர்களும் ஆகும்.
வரும் ஆண்டுகளில் இநதோனேசிய ஜனாதிபதி உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், நமது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்புகளை உருவாக்குவோம்." என்றார்.
இரு நாடுகளும் புதிய அரசியல் அத்தியாயங்களில் நுழைவதால், இந்த வருகை குறியீட்டு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது
இரு நாடுகளின் அருகாமையும் பலமும் இருந்தபோதிலும், காலாவதியான கருத்துக்கள் மற்றும் மூலோபாய தயக்கத்தால் உறவு பெரும்பாலும் பின்தங்கியுள்ள உறவுகளை மீட்டமைக்க ஆஸ்திரேலிய பிரதமருக்கு ஒரு சரியான வாய்ப்பாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.