ஆஸ்திரேலியாவில் வட்டி வீதம் குறைக்கப்படவுள்ளதென பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் நிதிச்சபைக் கூட்டம் ஆளுநர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
இந்த முடிவு நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக அமையக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் வேலையின்மை வீதம் நிலையாக உள்ளது.
மார்ச் மாதத்தில் 4.1 வீதமாக இருந்த வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்திலும் அதே அளவில்தான் உள்ளது.