கோல்ட் கோஸ்ட் ஹீப்ரூ சபைக்கு முன்பாக நாஜி வணக்கம் செலுத்தினார் எனக் கூறப்படும் இளைஞன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர் இன்று கன்பரா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
2024 ஒக்டோர் மாதத்திலேயே அவர் நாஜி வணக்கம் செலுத்தி இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2025 மார்ச் 10 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவரது வீடு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
தொலைபேசியும் கைப்பற்றப்பட்டது.
அவரது தொலைபேசி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அவர் பொதுவெளியில் நாஜி வணக்கம் செலுத்தும் படங்கள் இருந்துள்ளன.
இந்நிலையில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை எனவும் நாஜி சின்னம், வணக்கம் என்பன தடை செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இக்குற்றத்துக்காக குறித்த இளைஞனுக்கு 12 மாத சிறைத்தண்டனை மற்றும் 19 ஆயிரத்து 800 டொலர்கள் அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று பெடரல் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.