ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளை தாக்கிவிட்டு கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் இன்று அதிகாலை சிட்னியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை நாடு கடத்துவதற்காக சிட்னி விமான நிலையம் நோக்கி அழைத்துச்சென்ற இரு எல்லைப் படை அதிகாரிகள்மீதே கூரிய ஆயுதத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரு அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். தற்போது குணமடைந்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தன.
28 வயதான டொங்கோ தீவு நாட்டவரை, மேற்கு சிட்னியிலுள்ள எல்லாவுட் தடுப்பு மையத்தில் இருந்து, அதிகாரிகள் விமான நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
இவ்வாறு செல்லும் வழியிலேயே அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது.