தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு கனடா வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்துக்கு, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் அழைப்பு விடுத்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி தனது அமைச்சரவையை நியமித்துள்ளார். 28 அமைச்சர்களில் , இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாளியினரான அனிதா ஆனந்த் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்கு, ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.