பிரிஸ்பேனில் தனது கர்ப்பிணி மனைவியை கொலை செய்த நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் உயர்நீதிமன்றத்தில் இன்று மேற்படி தண்டனை வழங்கப்பட்டது.
2019 செப்டம்பர் மாதமே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் மயக்கமடைந்துவிட்டாரென அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும், அவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
தாய் மற்றும் கருவில் இருந்த குழந்தையை கொன்ற குற்றத்துக்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.