டூவூம்பாவில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் குற்றத்துக்காக 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, 25 வயதான ஈராக் நாட்டவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2023 மற்றும் 2024 காலப்பகுதியில் ஆறு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக உள்ளது. தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
நசீர் கிச்சோ தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை டூவூம்பா மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
குர்திஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து மனிதாபிமான விசாவிலேயே குறித்த இளைஞன் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளார்.
டெலிவரி டைவராக பணியாற்றிய காலப்பகுதியிலேயே யுவதிகளிடம் இவர் தவறாக நடந்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கிச்சோ ஏற்கனவே 438 நாட்களுக்கும் மேலாக காவலில் இருந்ததால், அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் விளைவாக அவரை நாடு கடத்த முடியுமா என்பது தெளிவாக தெரியவரவில்லை.