உக்ரைனுக்காகப் போராடிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் இணைந்து போரிட்ட ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்னைச் சேர்ந்த 33 வயதான ஆஸ்கார் ஜென்கின்ஸ் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யப் படையினரால் 2024 டிசம்பரில் ஜென்கின்ஸ் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவும் அதன் கிழக்கு உக்ரேனிய பிரதிநிதிகளும் உக்ரைனில் சண்டையிட பயணிக்கும் வெளிநாட்டினரை கூலிப்படையினராகக் கருதுகின்றனர்.
இது ஜெனீவா மரபுகளின் கீழ் பாதுகாப்புகள் மற்றும் உரிமைகளுடன் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளாகக் கருதுவதற்குப் பதிலாக, அதன் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்களைத் தண்டிக்க உதவுகிறது.
முன்னாள் உயிரியல் ஆசிரியரான ஜென்கின்ஸை விடுவிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யாவிடம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சபா.தயாபரன்.