குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் வாக்களிக்க தவறிய ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
154 டொலர்கள்வரை இவ்வாறு அபராதம் விதிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
குயின்ஸ்லாந்து தேர்தல் ஆணைக்குழு தகவலின் அடிப்படையில் சுமார் 35 ஆயிரம் பேர் வாக்களிக்க தவறியுள்ளனர்.
குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற தேர்தல்களில் பல முறை வாக்களிக்க தவறியவர்களுக்கு அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏன் வாக்களிக்க முடியாமல்போனது என்பதற்குரிய உரிய விளக்கத்தை அவர்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
உரிய காரணத்தை முன்வைக்க தவறினாலோ அல்லது பதிலளிக்காவிட்டாலோ 154 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு 35 ஆயிரம் பேரிடமிருந்து அபராதம் பெறப்பட்டால் 5 மில்லியன் டொலர்கள்வரை வசூலாகும்.
குயின்ஸ்லாந்து மாநில தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க தவறினால் 161 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.