மேற்கு சிட்னியில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
23 வயதான ஜோன் வெர்சேஸ் என்பவரே இவ்வாறு, துப்பாக்கி தாரியொருவரால் சரமாரியாக சுடப்பட்டு – கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு வார காலப்பகுதிக்குள் மேற்கு சிட்னியை உலுக்கிய இரண்டாவது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இதுவாகும்.
கொலை செய்யப்பட்டுள்ள இளைஞன் குற்றப் பின்னணி இல்லாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரை நிறுத்திவிட்டு இறங்கும்வேளையிலேயே அவரை நெருங்கிய துப்பாக்கிதாரி, அவர்மீது 10 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
2024 இல் களவாடப்பட்ட கார் ஒன்றிலேயே துப்பாக்கிதாரி வந்துள்ளார். அவர் தப்பி செல்லும்வேளை கார் எரிந்துள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று, விசாரணை நடத்திவருகின்றது.
2020 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சிட்னியல் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.