நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் கைதிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. 2020 முதல் 2023 வரை இந்நிலைமை காணப்பட்ட நிலையில் - தற்போது கைதிகளின் எண்ணிக்கை எகிறியுள்ளது.
இதற்கமைய 2023 முதல் 2025 மார்ச்வரையில் கைதிகளின் எண்ணிக்கை 8.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.
சிறைகளில் உள்ள கைதிகளில் 32 சதவீதமானோர் பூர்வக்குடி மக்களென்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் பூர்வக்குடி மக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.