குயின்ஸ்லாந்தில் காணாமல்போன சிறுமியை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
17 வயதான பியோ பிஷப் என்ற சிறுமியே மே 15 ஆம் திகதி காணாமல்போயுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் செல்வதற்கு அவர் இடம் ஒதுக்கி இருந்தாலும் அன்றைய தினம் பயணிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையம் நோக்கி அவர் சென்றார் எனக் கூறப்படும் காரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவர் காணாமல்போயுள்ளமை பொலிஸாரால் சந்தேகத்துக்கிடமான சம்பவமாகக் கருதப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.