சிட்னியில் 500 ஆண்டுகளிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பேரழிவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூகேஸில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள தாரி நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
டஜன் கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் கூரைகளில் இருந்து மீட்கப்பட்டனர் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
அதேவேளை, வெள்ள அனர்த்தத்தால் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர் என்று நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் இன்று காலை தெரிவித்தார்.
25 மற்றும் 49 வயதுடைய இரு ஆண்களும், 60 வயது பெண்ணொருவருமே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலை தொடரும் என்பதால் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
சபா.தயாபரன்.