கூட்டணி உறவை மீள கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடலில் லிபரல் மற்றும் நெஷனல்ஸ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதனால் நிழல் அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றிபெற்று - ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட பீட்டர் டட்டன் தனது தொகுதியிலேயே மண்கவ்வினார்.
இதனையடுத்து லிபரல் கட்சி தலைவராக சூசன் லே தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் லிபரல் கட்சியுடனான 80 வருடகால கூட்டணி உறவு முறித்துக்கொள்ளப்படும் என நெஷனல்ஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினர். கட்சிகளின் மூத்த உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
கலந்துரையாடலுக்கான நல்லிணக்க சமிக்ஞையாக நிழல் அமைச்சரவை மற்றும் ஊடகப் பேச்சாளர்கள் நியமனத்தை லிபரல் கட்சி பிற்போட்டுள்ளது.
நெஷனல்ஸ் கட்சியின் 4 கோரிக்கைகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.