மெரிக்காவின் , வொசிங்டன் நகரில் யூத அருங்காட்சிசாலையொன்றிற்கு அருகில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
காசா மக்களுக்கு உதவுவது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்த போது, ''பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்'' கோஷம் எழுப்பினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பயங்கரவாத கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகின்றது.
அதேவேளை, துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை - என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரும் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.