சர்வதேச வணிக விமானத்தில் சிட்னிக்கு போதைப்பொருள் கடத்திய இரு நபர்கள்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இவர்களின் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பிலும் விசாரணை வேட்டை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
சர்வதேச வணிக விமானம் ஊடாக ஆஸ்திரேலியாவுக்கு கொக்கைன் போதைப்பொருள் கடத்தப்படும் விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் விசாரணை ஆரம்பமாகியது.
கடந்த மார்ச் 17 ஆம் திகதி வணிக விமானமொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது ஒரு கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். விரிவான விசாரணைகளின் பின்னர் தற்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அடுத்தக்கட்ட வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளன.