தென்கிழக்கு மெல்பேர்ணில் வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
வீட்டில் இருந்த மேலும் மூவர் காயமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
இன்று அதிகாலை 2.10 மணியளவிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
வீட்டுக்குள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.