விக்டோரியா மாநிலத்தில் கத்தி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை மாநில பிரீமியர் ஜெசிந்தா ஆலன் இன்று வெளியிட்டார்.
மெல்பேர்ணில் ஷாப்பிங் சென்டரொன்றில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் இடம்பெற்ற நிலையிலேயே, மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய மே 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 01 ஆம் திகதிவரை கத்தி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற தடைகளை தற்காலிகமாக மட்டுமே அமுல்படுத்த முடியும் என பிரீமியர் சுட்டிக்காட்டினார்.
ஷாப்பிங் சென்டரில் நேற்று இடம்பெற்ற குழு மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரு குழுவினரும் கத்திகளுடன் வந்து மோதிக்கொண்டனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த 20 வயது இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.