1.8 கிலோ கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தினார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியர் ஒருவர், இந்தோனேசியா, பாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 206 பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்நபருக்கு தூதரக உதவி வழங்கப்பட்டுவருகின்றது என ஆஸி. வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிராக இன்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. எனினும், அதிகப்பட்சமாக மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டே இதுவென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.