குயின்ஸ்லாந்தின் பன்டாபெர்க் பகுதியில் தனது மூன்று வயது மகளை கொலை செய்தார் என கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலைவேளையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு முற்றத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், கத்தியொன்று மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதான தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.