நியூ சவூத் வேல்ஸ்ஸில் குழு மோதல் சம்பவங்களும், வன்முறைச் செயல்களும் தலைவிரித்தாடுவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
இவ்விவகாரத்தைக் கையாள்வதற்காக விசேட காவல்துறை செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
13 முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இந்த செயலணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பால்கன் என பெயரிடப்பட்டுள்ள இந்த விசேட பணிக்குழு, தெருக்களில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஜேசன் பாஸ்க் தலைமையிலான இந்த விசேட செயலணியில் 150 வரையான அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.