தெற்கு ஆஸ்திரேலியாவின் சார்லோட் வாக்கர், ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் செனட் சபைக்கு தெரிவானவர் என்ற அரசியல் சாதனையை படைத்துள்ளார்.
அவர் 21 வயதில மேல் சபையான செனட்டுக்கு தெரிவாகியுள்ளார். தேர்தல் தினத்தன்றுதான் அவர் தனது பிறந்தநாளைக்கூட கொண்டாடியுள்ளார்.
18 வயதில் லேபர் கட்சியில் இவர் இணைந்தார். தெற்கு ஆஸ்திரேலிய இளம் தலைவர் பதவியையும் வகிக்கின்றார். மே 3 கூட்டாட்சி தேர்தலில் அவர் செனட் சபைக்கு பேட்டியிட்டார்.
இதற்கு முன்னர் 2019 இல் 23 வயது அரசியல்வாதியொருவர் செனட் சபைக்கு தெரிவாகி இருந்தார். அவரே குறைந்த வயதில் மேல் சபைக்கு சென்றவராகக் கருதப்பட்டார். தற்போது அந்த சாதனையை சார்லோட் வாக்கர் முறியடித்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலிய மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க காத்திருப்பதாக சார்லோட் வாக்கர் தெரிவித்துள்ளார்.