சர்வதேச தபால் சேவை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 5 கிலோ ஐஸ் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முற்பட்ட தந்தை மற்றும் மகள் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதான பெண்ணுக்கு பேர்த் நீதிமன்றத்தால் மே 23 ஆம் திகதி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கரை வருடங்களுக்கு பிறகே அவர் பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
67 வயதான அவரது தந்தைக்கு 2022 மே 31 ஆம் திகதி பேர்த் நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட பொதியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே அதிலிருந்து ஐஸ் போதைப்பொருளை, எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.