ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் பொலிஸ் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்போது இறந்தார் எனக் கூறப்படும் 24 வயது பூர்வக்குடி இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
கோல்ஸ் சூப்பர் மார்க்கட்டில் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு அதிகாரிகள் குறித்த இளைஞனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இளைஞன் ஆக்ரோஷமாக செயற்பட்டதால் அவரை பொலிஸார் தரையில் இறுத்தியுள்ளனர்.
இதன்போது அவர் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டார் எனவும், பின்னர் சுயநினைவை இழந்தார் எனவும் கூறப்படுகின்றது.
சம்பவத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் பொலிஸ் காவலில் இருக்கும்போது பூர்வக்குடி மக்கள் தொடர்ச்சியாக இறந்துவருகின்றனர். அவர்கள் அடக்குமுறைகளுக்கு, சித்திரவதைகளுக்கு இலக்காகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.