மெல்பேர்ணுக்கு வடமேற்கே 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தாமஸ் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று நண்பகல் 12.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஐந்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இரு சிறிய லொறிகள், இரு கார்கள் மற்றும் கென்டேய்னர் என்பனவே மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கார் சாரதியொருவரும், லொறியொன்றில் இருந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றைய காரின் சாரதி உட்பட இருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
விபத்தையடுத்து நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.