சிட்னியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தனர்.
தீயைக் கட்டுப்படுத்திய பின்னர் 80 வயது முதியவர் ஒருவரின் சடலத்தை மீட்டனர். இச்சம்பவத்துக்கு பிறகு முதியவரின் மகன் தலைமறைவாகியுள்ளார்.
இவ்வாறு அவர் தப்பிச்செல்லும்போது கடையொன்றில் சிகரெட் வாங்குவதற்காக கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளார்.
தேடுதல் வேட்டையின் பிறகு இரவு கைது செய்யப்பட்டார். தந்தையை கொலை செய்த பிறகு அவர் வீட்டுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.